கைவிடப்பட்ட இரண்டு கைக் குண்டுகள் கடற்படை மூலம் செயலிழக்க பட்டது

பொல்பிதிகம, இந்தகொல்ல யாய 07 பகுதியில் கைவிடப்பட்ட இரண்டு கைக் குண்டுகளை செயலிழக்க 2020 ஜனவரி 13 ஆம் திகதி கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

தேசிய பாதுகாப்புக்காக முக்கிய பங்கு வகிக்கும் இலங்கை கடற்படை, பொல்பிதிகம பொலிஸாரினால் பரப்பப்பட்ட தகவலின் பேரில் இந்தகொல்ல யாய 07 பகுதியில் கைவிடப்பட்ட இந்த 02 கைக்குண்டுகளை செயலிழக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இந்த சம்பவம் குறித்து பொல்பிதிகம பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், கடற்படைக்கு அறிவிக்கப்பட்ட இதேபோன்ற சம்பவங்களுக்கு பதிலளிக்க கடற்படை வெடிகுண்டுகள் அகற்றும் பிரிவு எப்போதும் எச்சரிக்கையாக உள்ளது.