சட்டவிரோதமாக கடல் அட்டைகள் பிடித்த நபர்கள் கடற்படையால் கைது

2020 ஜனவரி 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் பாலைதீவு கடல் பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக கடல் அட்டைகள் பிடித்த நபர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்க இலங்கை கடற்படை ஆர்வமாக உள்ளது. அதன் படி, பாலைதீவு கடல் பகுதியில் ரோந்து சென்றபோது அனுமதி பத்திரிக்கைகளில் வழங்கும் சட்டங்களை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட காரனத்தினால் பதினெட்டு (18) மீனவர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அங்கு 04 டிங்கி படகுகள், 04 வெளிப்புற எரிப்பு இயந்திரங்கள், 03 சமிக்ஞை இயந்திரங்கள், சுழியோடி பொருட்கள் மற்றும் மீனவர்களால் பிடிக்கப்பட்ட 195 கடல் அட்டைகள் (45 கிலோகிராம்) கடற்படை காவலுக்கு எடுக்கப்பட்டன. அவர்கள் 22 முதல் 54 வயதுக்குட்பட்ட மன்னார் மற்றும் இருக்குளம்பிட்டி ஆகிய பகுதிகளில் வசிப்பவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள், டிங்கி படகுகள், பிடிக்கப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் பிற உபகரணங்கள் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம், வெலனி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.