கேரள கஞ்சாவுடன் மோட்டார் சைக்கிளொன்று கடற்படையால் கைது

சாவக்காச்சேரி பளெய் பகுதியில் இன்று (2020 ஜனவரி 08) கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து மேற்கொன்டுள்ள நடவடிக்கையின் போது சுமார் 8 கிலோகிராம் 475 கிராம் கேரள கஞ்சாவை கண்டுபிடி‍க்கப்பட்டது.

நாட்டில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கவும், தீவில் போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்யவும் இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, யாழ்ப்பாணம் போதைப்பொருள் தடுப்பு அலுவலகத்துடன் இனைந்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிளொன்று கண்கானித்த கடற்படையினர் மோட்டார் சைக்கிளை சோதித்தனர் அங்கு மோட்டார் சைக்கிளில் சுமார் 8 கிலோகிராம் 475 கிராம் கேரள கஞ்சாவை மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கேரளா கஞ்சா விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், கடற்படையின் கூட்டு நடவடிக்கை காரணமாக சந்தேக நபர்கள் தப்பி ஓடிவிட்டதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

மோட்டார் சைக்கிளில் ஒரு கை தொலைபேசியும் கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் சந்தேக நபர்களைத் தேடுவதற்கு கடற்படை மற்றும் காவல்துறை கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன. கேரள கஞ்சாவுடன் மோட்டார் சைக்கிள் மற்றும் கை தொலைபேசி ஆகியவை மேலதிக விசாரணைகளுக்காக பளெய் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.