இலங்கையில் ஆஸ்திரேலிய பாதுகாப்பு ஆலோசகர் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதியுடன் சந்திப்பு

இலங்கையில் உள்ள ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் குழு கேப்டன் சீன் அன்வின், 2020 ஜனவரி 18 அன்று கிழக்கு கட்டளை தலைமையகத்தில் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.

அங்கு அவர்கள் இருதரப்பு விஷயங்களைப் பற்றி விவாதித்தனர். இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் நினைவு பரிசு பரிமாற்றமும் நடைபெற்றது.