இந்திய கடற்படை கப்பல் “அய்ராவத்” வின் கடற்படை உறுப்பினர்களுக்காக பேரழிவு மேலாண்மை மற்றும் விரைவான பதில் பயிற்சி திட்டமொன்று நடைபெற்றது.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜய மொன்று வந்துள்ள இந்திய கடற்படை கப்பல் “அய்ராவத்” வின் கடற்படை உறுப்பினர்களுக்காக 2020 ஜனவரி 21 ஆம் திகதி கங்கேவாடிய விரைவான அதிரடி படகுப் படைத் தலைமையகத்தில் மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு நிவாரணம் குறித்த பயிற்சித் திட்டமொன்று நடத்தப்பட்டது.

2020 ஜனவரி 20 ஆம் திகதி இலங்கைக்கு வந்த அய்ராவத் கப்பலின் முப்பது இந்திய கடற்படை வீரர்கள் 2020 ஜனவரி 21 ஆம் திகதி கற்பிட்டி கடற்படை விரைவான அதிரடி படகுப் படைத் தலைமையகத்திற்கு வந்தனர். அங்கு அவர்களுக்கு இலங்கை கடற்படையால் மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு நிவாரணம் குறித்த பயிற்சித் திட்டமொன்று நடத்தப்பட்டது.

கடற்படையின் விரைவான பதில், மீட்பு மற்றும் நிவாரணப் பிரிவில் (4RU) இணைக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் குழு இந்த நிகழ்வில் பங்கேற்றனர். இங்கு அவர்களுக்கு அவசரநிலைகளுக்கு பதிலளிப்பதற்கும், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் போன்ற இயற்கை பேரழிவுகளிலிருந்து மக்களை மீட்பது குறித்த நடைமுறை அறிவை வழங்கப்பட்டது.மேலும் அவசர காலங்களில் இடம்பெயர்ந்தவர்களை எவ்வாறு திட்டமிட்டு, நிவாரணம் வழங்குவது மற்றும் நிர்வகிப்பது என்பது குறித்த நடைமுறை அறிவை வழங்கப்பட்டது.

இந்த திட்டத்தை விரைவான அதிரடி படகுப் படை தலைமையகத்தில் கட்டளை அதிகாரி உன்னிப்பாகக் கண்காணித்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய கடற்படை கப்பல் “அய்ராவத்” வின் கடற்படை உறுப்பினர்கள், இந்த சிறந்த வாய்ப்பை வழங்கிய இலங்கை கடற்படைக்கு தங்களுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.