கடற்படைத் தளபதியிடம் வழங்கப்பட்ட ‘சயுருசர’ 40 வது பதிப்பு

‘சயுருசர’ பத்திரிகையின் 40 வது பதிப்பு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவுக்கு அதன் ஆசிரியர் குழுவால் இன்று (ஜனவரி 24) வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கடற்படை உதவியாளரும் பத்திரிகையின் புரவலருமான கடற்படை ஊடக ஒருங்கிணைப்பாளரும் பத்திரிகையின் நிர்வாக மேற்பார்வையாளருமான கொமடோர் தம்மிகா குமார, லெப்டினன்ட் கமாண்டர் இசுரு சூரியபண்டார மற்றும் பணியாளர் அதிகாரி (மீடியா) மற்றும் 'சயுருசர' தலைமை ஆசிரியர், லெப்டினன்ட் கமாண்டர் (வி.என்.எஃப் ) சாலியா சுதசிங்கவும் கலந்து கொண்டார்.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா வழங்கிய வழிகாட்டுதலுடன், கடற்படை வீரர்களின் கட்டுரைகள் உட்பட இதழ் வெளியிடப்பட்டது. கடற்படையின் கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு திட்டங்கள், சுற்றுச்சூழல் இயக்கிகள் மற்றும் சிறப்பு சந்தர்ப்பங்கள் குறித்து அம்சக் கட்டுரைகள் மூலம் கடற்படை சமூகத்தை அறிந்து கொள்வதையும் இது நோக்கமாகக் கொண்டு இந்த ஆண்டு இதழின் வெளியீடு கடற்படையின் தற்போதைய தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வழிகாட்டுதலுடன் வெளியிடப்பட்டுள்ளது.