அனுமதிக்கப்ட்ட பத்திரங்கள் இல்லாமல் மீன்பிடியில் ஈடுபட்ட 03 நபர்கள் கடற்படையினால் கைது

2020 ஜனவரி 24 ஆம் திகதி காலியிவின் தொடண்டுவ, கடல்களில் அனுமதிக்கப்ட்ட பத்திரங்கள் இல்லாமல் மீன்பிடியில் ஈடுபட்ட 03 நபர்களை கடற்படை கைது செய்தது.

இந்த 03 நபர்களை தெற்கு கடற்படை கட்டளை, தொடண்டுவ வெளியே உள்ள கடல் பகுதியில், அனுமதிக்கப்ட்ட பத்திரங்கள் இல்லாமல், மீன்பிடியில் ஈடுபட்டபோது கைது செய்தது. சந்தேக நபருடன் உரிமம் பெறாத டிங்கி மற்றும் மீன்பிடிக்கப் பயன்படுத்தப்படும் பல மீன்பிடி உபகரணங்களும் கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ளன. சந்தேக நபர்கள் 29, 38 மற்றும் 43 வயதுடைய காலி, ஜின்டொட பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

03 சந்தேக நபர்களும் டிங்கி மற்றும் பிற மீன்பிடி சாதனங்களுடன் கொழும்பின் மீன்வள மற்றும் நீர்வளத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.