பாகிஸ்தான் கடற்படையின் கடற்படைத் தளபதி இலங்கைக்கு வருகை

பாகிஸ்தான் கடற்படையின் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜாபர் மஹ்மூத், இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்வதற்காக 2020 ஜனவரி 25 ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் அழைப்பின் பேரில், பாகிஸ்தான் கடற்படையின் கடற்படைத் தளபதி ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்திற்காக தீவுக்கு வந்தார். அட்மிரல் மஹ்மூத் நாட்டில் தங்கியிருந்த காலத்தில், கடற்படைத் தளபதி, ராணுவம் மற்றும் விமானப்படைத் தளபதிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோரை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த மாதம் 29 ஆம் திகதி தனது முறையான இலங்கை சுற்றுப்பயணத்தை முடிப்பதற்கு முன்பு பாகிஸ்தான் கடற்படைத் தலைவர் மேலும் பல நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளார்.