கடற்படையின் உதவியுடன் கடலோர தூய்மைப்படுத்தும் திட்டங்களைத் தொடர்கிறது.

கடற்படையால் செயல்படுத்தப்பட்ட கடலோர தூய்மைப்படுத்தும் திட்டத்தில் பல திட்டங்கள் 2020 ஜனவரி 25 அன்று வடக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி, வடக்கு கடற்படை கட்டளையால் செயல்படுத்தப்பட்ட கடலோர தூய்மைப்படுத்தும் திட்டம், ஊர்காவற்துறை மற்றும் மண்டத்தீவு கடற்கரைகளிலும் தெற்கு கடற்படை கட்டளை மூலம் செயல்படுத்தப்பட்ட கடலோர சுத்திகரிப்பு திட்டம் காலி, தங்காலை, ஹம்பாந்தோட்டை பகுதிகளும் அடிப்படையாகக் கொண்டு இடம்பெற்றது. இயற்கை காரணங்கள் மற்றும் மனித நடவடிக்கைகளால் பெரிதும் மாசுபட்ட கடற்கரைகளை பொதுமக்களின் ஆதரவுடன் கடற்படை பணியாளர்களின் அர்ப்பணிப்பு காரணமாக அழகிய கடலோர பகுதியாக மாற்ற முடிந்தது.

மேலும், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வழிகாட்டுதலுடன் தீவின் கடலோர பகுதிகளில் அழகை மேம்படுத்த கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது. இத் திட்டம் முலம் தீவைச் சுற்றியுள்ள கடலோர பகுதிகளுக்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஈர்க்கப்படுகின்றது.


தெற்கு கடற்படை கட்டளையின் கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டம்


வடக்கு கடற்படை கட்டளையின் கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டம்