கடலாமை இறைச்சியுடன் ஒரு நபர் கைதுசெய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் பத்தரமுல்லை வனவிலங்கு துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து நீர்கொழும்பு பகுதியில் இன்று (2020 ஜனவரி 25) மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது கடலாமை இறைச்சியுடன் ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.

இலங்கையைச் சுற்றியுள்ள கடலின் கடல் வளங்களை பாதுகாக்க கடற்படை தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் படி 2020 ஜனவரி 25 ஆம் திகதி கடற்படையினர் பத்தரமுல்லை வனவிலங்கு துறை அதிகாரிகளுடன் இனைந்து நீர்கொழும்பு வெல்ல தெரு பகுதியில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது விற்பனைக்கு தயாராக்கபட்ட சுமார் 01 கிலோ 600 கிராம் கடலாமை இறைச்சியுடன் ஒரு நபர் கைது செய்யப்பட்டது.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 27 வயதான நீர்கொழும்பு பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடலாமை இறைச்சி மற்றும் சந்தேகநபர் மீது மேலதிக விசாரணை பத்தரமுல்லை வனவிலங்கு பாதுகாப்புத் துறை அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படுகிறது.