பிலிப்பைன்ஸ் கடற்படைக்கு சொந்தமான இரண்டு கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

பிலிப்பைன்ஸ் கடற்படைக்கு சொந்தமான ரமோன் அல்கராஸ்(Ramon Alcaraz) மற்றும் டாவோ டெல்சூர் (Davao Delsur) ஆகிய இரண்டு கப்பல்கள் இன்று (2020 ஜனவரி 26,) கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளது. மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு வருகை தந்த குறித்த கப்பலினை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றுள்ளன.

அதன் பின் இக் கப்பலில் வந்த நடவடிக்கைகள் கட்டளை அதிகாரி கர்னல் நொஎல் டி பெலெரன் (Noel D Beleran) இக் கப்பலின் கட்டளை அதிகாரிகளான கேப்டன் பிரான்சிஸ்கோ லூவிஸ் (Francisco Luis A Laput) மற்றும் கொமடான்டர் ஹோமர் டி கோன்சாலஸ் (Homer D Gonzales) ஆகியோர் உட்பட குழுவினர் மேற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்கவை சந்தித்தனர். இச் சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு வருகை தந்த குறித்த கப்பல்கள் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்படவுள்ள நட்பு விளையாட்டு நிகழ்வுகள், கலாச்சார நிகழ்வுகள் மற்றும் இலங்கையின் முக்கிய இடங்களின் சுற்றுப்பயணங்கள் போன்ற தொடர் நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளது. கப்பல்கள் தங்களது மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணத்தை முடித்து 2020 ஜனவரி 29 அன்று தீவை விட்டு வெளியேற திட்டமிடப்பட்டுள்ளது.