இலங்கை நீர் விளையாட்டு பிரிவு ஏற்பாடு செய்த கடல் நீச்சல் போட்டித்தொடரில் முதல் இடத்தை கடற்படை கைப்பற்றியது

2020 ஜனவரி 26 ஆம் திகதி இலங்கை நீர் விளையாட்டு பிரிவினால் தொடர்ச்சியாக 3 வது ஆண்டாக ஏற்பாடு செய்யப்பட்ட திறந்த கடல் நீச்சல் போட்டித்தொடரில் இலங்கை கடற்படையை பிரதிநிதித்துவப்படுத்தி 11 நீச்சல் வீரர்கள் பங்கேற்றனர்.

71 நீச்சல் வீரர்களின் பங்கேற்புடன் காலி முகத்திடம் கடற்கரையில் நடைபெற்ற இந்த பொட்டித்தொடரில் பாடசாலைகள், விளையாட்டுக் கழகங்கள் மற்றும் முத்தரப்புப் படைகளை பிரதிநிதித்துவப்படுத்தி பல போட்டியாலர்கள் கழந்துகொண்டனர். இந்த போட்டித்தொடருக்காக கடற்படையின் 11 போட்டியாளர்கள் பங்கேற்றதுடன் இலங்கை கடற்படையின் ஜி.எஸ்.என் பெரேரா முதல் இடத்தை வென்றார். கடற்படையின் மற்ற போட்டியாளர்கள் 6, 11 மற்றும் 17 வது இடங்களைப் பெற்றனர். விருது வழங்கும் விழாவில் இலங்கை நீர் விளையாட்டு குளத்தின் முன்னாள் தலைவர் மஹிந்த லியானகே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மேலும், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் உத்தரவின் பேரில், கடற்படையின் விரைவான பதில் மீட்பு மற்றும் நிவாரணப் பிரிவு நீச்சல் வீரர்களின் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டது. தேவையான சந்தர்ப்பங்களுக்கு இந்த வகையான நலன்புரி வசதிகளை வழங்க இலங்கை கடற்படை தயாராக உள்ளது.