பாகிஸ்தான் கடற்படை தளபதி கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்

உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு இலங்கைக்கு வந்த பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் சபர் மஹ்மூத் இன்று (2020 ஜனவரி 26) கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயமொன்று மேற்கொண்டுள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு இலங்கைக்கு வந்த பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் சபர் மஹ்மூத் இன்று (2020 ஜனவரி 26) கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயமொன்று மேற்கொண்டுள்ளார். அங்கு பாகிஸ்தான் கடற்படைத் தளபதி கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்ரமசிங்க மற்றும் கடல்சார் அகாடமில் கட்டளை அதிகாரி கொமடோர் பிரசந்ந மஹவிதான சந்தித்து இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டார். இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் நினைவு பரிசு பரிமாற்றம் மற்றும் திருகோணமலை கடற்படை ஆலயப் பகுதியில் ஒரு மரக்கன்றை நட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்த பயணத்தின் போது பின்னவல யானை அனாதை இல்லத்தையும் பார்வையிட்ட பாகிஸ்தான் கடற்படை தளபதி, அந்த இடத்தின் அழகைக் கண்கானித்தார்.