கிரிகெரி ஏரியில் விபத்தான 'ஜெட் ஸ்கி' படகில் இருந்த மூன்று நபர்களை கடற்படையால் மீட்பு

நுவரலியா கிரிகெரி ஏரியில் 'ஜெட் ஸ்கி’ நீர் விளையாட்டில் ஈடுபட்ட போது விபத்தான மூன்று நபர்களை 2020 ஜனவரி 26 ஆம் திகதி கடற்படையினரினால் மீட்கப்பட்டது.

நுவரலியா கிரகோரி குளத்தில் 'ஜெட் ஸ்கி’ நீர் விளையாட்டில் ஈடுபட்ட போது குறித்த படகின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் படகு விபத்தானது. அங்கு அவர்களை கண்கானித்த கிரகோரி குளத்தில் உயிர்மீட்பு கடமையில் ஈடுபடுகின்ற இலங்கை கடற்படை துரித இயக்க மீட்பு மற்றும் நிவாரனப் பிரிவில் (4RU) இணைப்புப் பெற்ற கடற்படை வீரர்களால் இவர்களை மீட்கப்பட்டது..

இவ்வாரு மீட்கப்பட்ட நபர்கள் இரத்தினபுரி மற்றும் நுவரலியா பகுதியில் வசிக்கின்ற 57,24 மற்றும் 21 வயதானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். மேலும், பேரழிவால் பாதிக்கப்பட்ட உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு உடனடி நிவாரணம் அளிக்க தீவில் உள்ள ஆறுகளில், தொட்டிகளில் மற்றும் தீவு முழுவதும் மீட்புக் குழுக்களை கடற்படை நிறுத்தியுள்ளது.