கொழும்பு கடற்படை பயிற்சி - CONEX 2020 தொடங்கியது

ශஇலங்கை கடற்படையால் இரண்டாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கொழும்பு கடற்படை பயிற்சி (Colombo Naval Exercise –CONEX 20) இன்று (2020 ஜனவரி 27) தொடங்கி 2020 ஜனவரி 31 வரை கொழும்பு கடலில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டில் நடத்திய வெற்றிகரமான கடல்சார் பயிற்சிக்குப் பிறகு இரண்டாவது முறையாக ஏற்பாடுசெய்யப்பட்ட கொழும்பு கடற்படை பயிற்சி - CONEX 2020 இன் தொடக்க விழா இலங்கை கடற்படை கப்பல் சிந்துரலவில் இன்று கடற்படை நடவடிக்கைகளின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் நந்தன ஜயரத்ன தலைமையில் தொடங்கியது. இந் நிகழ்வுக்காக கொமடோர் கடல் பயிற்சி அதிகாரி கொமடோர் இசிர காசிவத்த மற்றும் கடற்படைப் பயிற்சியில் பங்கேற்கின்ற அனைத்து கப்பல்களின் கட்டளை அதிகாரிகள் உட்பட இலங்கை விமானப் படையின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

மேலும், இலங்கை கடற்படைக்கு சொந்தமான கப்பல்கள் மற்றும் இலங்கை விமானப்படையின் ஹெலிகாப்டர்கள் கழந்துகொள்கின்ற இந்த கடற்படை பயிற்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை அதிகாரிகள் இடையில் கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றது.

மேலும் குறித்த கடற்படை பயிற்சி இறங்குதுறை அருகில் மற்றும் கடல் என, இரண்டு கட்டங்களில் கீழ் நடைபெற உள்ளது. அங்கு கப்பல்களுக்கு இடையில் பொருட்கள் பரிமாற்றம், இரண்டு கப்பல்களை இழுத்துச் செல்லுதல், கப்பல்களில் ஹெலிகாப்டர்கள் தரையிறங்குதல் போன்ற பல கடற்படை பயிற்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன.