இலங்கை கடற்படை கப்பல் ‘ரனதீர’ வின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் (அயுதங்கள்) பிரியதர்ஷன உடுகும்புர கடமையேற்பு

இலங்கை கடற்படையின் ரோந்து கப்பலான ‘ரனதீர‘வின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் (அயுதங்கள்) பிரியதர்ஷன உடுகும்புர 2020 ஜனவரி 27 ஆம் திகதி தன்னுடைய பதவியில் கடமைகள் தொடங்கினார்.

கப்பலின் முன்னாள் கட்டளை அதிகாரியான கொமான்டர் (திசைகாட்டி) சமிந்த விட்டச்சி அவர்களினால் காங்கேசந்துரை எண் 01 துறைமுக வளாகத்தில் உள்ள இறங்குதுறையில் வைத்து புதிய கட்டளை அதிகாரிக்கு கடற்படை பாரம்பரியமாக கடமைகள் ஒப்படைக்கப்பட்டது. கப்பலின் புதிய கட்டளை அதிகாரியால் பிரிவு சோதனையை தொடர்ந்து முறையான விழாவின் நடவடிக்கைகள் நிறைவடைந்தன.

இன் நிகழ்வுக்காக இலங்கை கடற்படை கப்பல் உத்தர நிருவனத்தின் கட்டளை அதிகாரி கேப்டன் மஹேஷ் த சில்வா கழந்துகொன்டார்.