கேரள கஞ்சாவுடன் ஒருவரை கைது செய்ய கடற்படை ஆதரவு

2020 ஜனவரி 27 ஆம் திகதி பன்னல, பம்மன்ன பகுதியில் கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சுமார் 02 கிலொ 300 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவரை கைது செய்யப்பட்டது.

தீவில் போதைப்பொருள் அச்சுறுத்தலை அகற்றும் தேசிய பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள இலங்கை கடற்படை 2020 ஜனவரி 27 ஆம் திகதி ஜயவர்தனபுர பொலிஸ் சிறப்பு பணிக்குழுவுடன் இனைந்து பன்னல, பம்மன்ன பகுதியில் மேற்கொண்டுள்ள கூட்டு நடவடிக்கையின் போது ஒரு சந்தேகத்திற்கிடமான நபரை அவதானித்தனர். குறித்த நபரை மேலும் விசாரித்த போது அவரிடமிருந்து 02 கிலொ 300 கிராம் கேரள கஞ்சாவை கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த சந்தேக நபர் மற்றும் கேரள கஞ்சா கைது செய்யப்பட்டதுடன் சந்தேக நபர் 34 வயதான நாரம்மல பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து பன்னல காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.