கடலில் விபத்தான இந்திய மீனவர்களுக்கு கடற்படை உதவி

மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட போது கடலில் விபத்தான இந்திய மீனவர்களுக்கு இலங்கை கடற்படையால் 2020 ஜனவரி 27 ஆம் திகதி உதவி வழங்கப்பட்டது.

அனலதீவுக்கு மேற்கு கடல் பகுதியில் 11 கடல் மைல் தொலைவில் உள்ள சர்வதேச கடல் எல்லைக்கு அருகே இலங்கை கடலில் மிதக்கும் ஒரு மீன்பிடி படகை வடக்கு கடற்படை கட்டளை கவனித்தது. குறித்த படகு பற்றி மேலும் ஆய்வு செய்த போது இயந்திரம் செயலிழந்த காரணத்தினால் மற்றும் கப்பலுக்குள் கடல் நீர் கசிவிலிருந்த காரணத்தினால் இலங்கை கடல் எல்லையை நோக்கி மிதந்தது என்பதை உறுதிப்படுத்தப்பட்டது. பின்னர் இலங்கை கடற்படையினரினால் படகில் நிறைந்துள்ள கடல் நீரை அகற்றி இந்திய கடற்பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டு மற்றொரு இந்திய மீன்பிடிக் கப்பலில் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்த முறையில், இலங்கை கடல் பகுதியில் மற்றும் தேடல் மற்றும் மீட்புப் பகுதியில் பாதிக்கப்படுகின்ற மீன்பிடி மற்றும் கடல்சார் சமூகங்களுக்கு நிவாரணம் வழங்க இலங்கை கடற்படை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.