சட்டவிரோதமான முறையில் இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 11 பேர் கடற்படையினரால் கைது

சட்டவிரோதமான முறையில் இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 11 பேர் மற்றும் அவர்களின் ஒரு படகு 2020 ஜனவரி 27 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.

இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட நெடுந்தீவு வடக்கு கடல் பகுதியில் இலங்கை கடற்படை மேற்கொண்ட வழக்கமான ரோந்துப் பணியின் போது சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஒரு இந்திய மீன்பிடி படகுடன் 11 இந்திய மினவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கடற்படையால் கைது செய்யப்பட்ட இந்திய மின்பிடி படகு மற்றும் மீனவர்கள் இலங்கை கடற்படை கப்பல் எலார நிறுவனத்திற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் அங்கு மருத்துவ பரிசோதனையின் பின்னர் இவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இலங்கை கடற்படை தொடர்ந்து நடத்திய ரோந்துப்பணியின் விளைவாக, இலங்கை பிராந்திய கடல் எல்லை மீறும் இந்திய மீன்பிடி இழுவைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. மேலும், கடற்படை தனது வளங்களை உள்ளூர் மீனவர்களின் பாதுகாப்பிற்காகவும், தீவின் பிராந்திய நீரில் மீன் இருப்புக்களைப் பாதுகாப்பதற்காகவும் தொடர்ந்து செயல்படும்.