ஹெராயினுடன் ஒருவர் கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் பொலிஸார் ஒருங்கிணைந்து இன்று (2020 ஜனவரி 28) மெதவச்சி, இகிரிகொல்லாவ சாலம்புபுர பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது. 01 கிராம் மற்றும் 150 மிலி கிராம் கேரள கஞ்சாவுடன் ஒரு சந்தேக நபரை கைது செய்யப்பட்டது.

போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் இலங்கை கடற்படை, நாட்டில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருட்களைத் தடுப்பது குறித்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் படி கடற்படை அனுராதபுரம் மாவட்ட பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவுடன் ஒருங்கிணைந்து மெதவச்சி, இகிரிகொல்லாவ சாலம்புபுர பகுதியில் மேற்கொண்டுள்ள சிறப்பு நடவடிக்கையின் போது சாலையில் பயணித்துக்கொண்டிருந்த சந்தேக நபரை பரிசோதித்தபோது, அவரிடம் சுமார் 01 கிராம் மற்றும் 150 மிலி கிராம் ஹெராயின் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சந்தேக நபர் இகிரிகொல்லாவ பகுதியில் வசிக்கும் 33 வயதுடையவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மெதவச்சி பொலிசார் சந்தேக நபர் மற்றும் ஹெராயின் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.