பாகிஸ்தான் கடற்படைத் தளபதி சபர் மஹமூத் கெளரவ பிரதமர், பாதுகாப்பு செயலாளர், இராணுவ மற்றும் விமானப்படைத் தளபதிகள் ஆகியோரை சந்தித்தார்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் சபர் மஹமூத் கெளரவ பிரதமர், பாதுகாப்பு செயலாளர், இராணுவம் மற்றும் விமானப்படை தளபதிகள் சந்தித்து 2020 ஜனவரி 28 அன்று இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தினர்.

உத்தியோகபூர்வ வருகைக்காக கடந்த ஜனவரி 25 ஆம் திகதி இலங்கைக்கு வருகைதந்த அட்மிரல் சபர் மஹமூத் கெளரவ பிரதமர், பாதுகாப்பு செயலாளர், இராணுவம் மற்றும் விமானப்படை தளபதிகளை 2020 ஜனவரி 28 ஆம் திகதி சந்தித்தார். பாக்கிஸ்தான் கடற்படைத் தலைவருக்கு இராணுவ மற்றும் விமானப்படை தலைமையகத்தில் இராணுவ மரபுக்கு இணங்க சிறப்பு மரியாதை வழங்கப்பட்டது. இந்த சந்திப்புகளில் இருதரப்பு கலந்துரையாடல்கள் இடம்பெற்றதுடன் நினைவுச் சின்னங்களும் பரிமாற்றப்பட்டன.