கொழும்பு கடற்படை பயிற்சி - CONEX 2020 முதல் நாள் வெற்றிகரமாக நிறைவடைந்தது

இலங்கை கடற்படையால் இரண்டாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட கொழும்பு கடற்படை பயிற்சியின் (Colombo Naval Exercise –CONEX 20) முதல் நாள் 2020 ஜனவரி 28 அன்று வெற்றிகரமாக நிறைவடைந்தது.

இலங்கை கடற்படையால் இரண்டாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட கொழும்பு கடற்படை பயிற்சியின் (Colombo Naval Exercise –CONEX 20) முதல் நாள் பயிற்சியில் இலங்கை கடற்படையின் ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பல்கள், கடலோர கண்காணிப்புக் கப்பல்கள் மற்றும் துரித தாக்குதல் படகுகள் பங்கேற்றது. இந்த பயிற்சிக்காக இலங்கை விமானப்படையின் எம்.ஐ 17 வகையில் ஹெலிகாப்டர் ஒன்றும் கழந்துகொண்டது. முதல் நாள் கடல் குண்டுகள் கொண்ட பகுதியில் கப்பல்கள் பயணித்தல், கப்பலை இழுத்துச் செல்லுதல், கப்பல்கள் கடற்படையின் வடிவத்தில் பயணம் செய்தல், கப்பல்களுக்கு இடையில் தொடர்புகொள்வது போன்ற பயிற்சிகளைக் கொண்டிருந்தது.

இது தவிர, பல கடற்படை பயிற்சிகளும் கொழும்புக்கு அருகிலுள்ள கடலில் 2020 ஜனவரி 31 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.