கேரள கஞ்சா பொதியொன்று கைதுசெய்ய கடற்படை ஆதரவு

2020 ஜனவரி 29 ஆம் திகதி கிலினோச்சி பகுதியில் கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 01 கிலோ மற்றும் 900 கிராம் கேரள கஞ்சாவைக் கைப்பற்றியது.

2020 ஜனவரி 29 அன்று இலங்கை கடற்படை பொலிஸ் சிறப்பு பணிக்குழுவுடன் இனைந்து கிலிணொச்சி பாரதிபுரம் பகுதியில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது கைவிடப்பட்ட பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டதுடன் குறித்த பொதி மேலும் சோதனை செய்த போது பொதிக்குள் சுமார் 1 கிலோ மற்றும் 900 கிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது. போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்காக கடற்படை தொடர்ந்து மேற்கொண்ட கண்காணிப்பின் விளைவாக 01 கிலோ மற்றும் 900 கிராம் கேரள கஞ்சாவை கைவிட்டு கடத்தல்காரர்கள் தப்பிச் சென்றுள்ளதாக நம்பப்படுகிறது.

கைது செய்யப்பட்ட கேரள கஞ்சா மேலதிக விசாரணைகளுக்காக கிலினோச்சி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.