ராயல் ஆஸ்திரேலிய கடற்படை பிரதிநிதிகள் குழு கடற்படை தளபதியுடன் சந்திப்பு

ராயல் ஆஸ்திரேலிய கடற்படைப் பிரதிநிதிகள் குழு 2020 ஜனவரி 29 ஆம் திகதி கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வாவை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தனர்.

பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக இலங்கை கடற்படையினரை சந்திக்க இலங்கைக்கு வந்த ராயல் ஆஸ்திரேலிய கடற்படையின் கமடோர் ரேமண்ட் லெகெட் உட்பட குழுவினர் இவ்வாரு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவை 2020 ஜனவரி 29 ஆம் தேதி கடற்படை தலைமையகத்தில் சந்தித்தனர்.

அதன்படி, கடலில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாதத்தை கையாள்வதில் கடற்படையின் பங்கு குறித்து பல இருதரப்பு பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன.