பாதுகாப்பு செயலாளர் கடற்படை தலைமையகத்திற்கு வருகை

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன இன்று (2020 ஜனவரி 31) கடற்படை தலைமையகத்திற்கு விஜயம் செய்தார்.

உத்தியோகபூர்வ சந்திப்புக்காக கடற்படை தலைமையகத்திற்கு வருகை தந்த பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை இன்று (2020 ஜனவரி 31) கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி கடற்படை தலைமையகத்திற்கு வரவேற்கப்பட்டது. அவர் பாதுகாப்பு செயலாளராக கடமைகளை ஏற்றுக்கொண்ட பின்னர் கடற்படை தலைமையகத்திற்கு வரகை தந்த முதல் பயணம் இதுவாகும்.

இங்கு கடற்படைத் தளபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளர் பல முக்கியமான விஷயங்களைப் பற்றி உரையாடியதுடன் இச்சந்திப்பின் ஞாபகார்த்தமாக இவர்கள் இடையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.