191 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் கைது

இன்று (2020 ஜனவரி 31) யாழ்ப்பாணம் மாதகல்துரை பகுதியில் இலங்கை கடற்படை மற்றும் கலால் துறை நடத்திய சோதனை நடவடிக்கையின் பொது கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை கடற்படை இன்று யாழ்ப்பாணம் கலால் பிரிவுடன் இனைந்து யாழ்ப்பாணம் மாதகல்துரை பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான வீடொன்று கண்கானிக்கப்பட்டது. குறித்த வீடு மேலும் பறிசோதித்த போது சுமார் 191 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அப்பகுதியில் வசிக்கும் 20 வயதுடையவர் என கண்டறியப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் கேரள கஞ்சா குறித்து யாழ்ப்பாண கலால் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.