2019 ஆம் ஆண்டில் சிறந்த கப்பலாக இலங்கை கடற்படை கப்பல் சிந்துரல பெயரிடப்பட்டது.

2019 ஆம் ஆண்டில் சிறந்த கப்பலாக இலங்கை கடற்படை கப்பல் சிந்துரலவும், சிறந்த கிறிய கப்பலாக ஏ 521 கப்பலும் சிறந்த துரித தாக்குதல் படகாக பி 450 படகும் 2020 ஜனவரி 31 ஆம் திகதி பெயரிடப்பட்டதுடன் இது தொடர்பான ஆண்டு குறிப்பிட்டுள்ள ஒரு நட்சத்திரைக் கொண்ட சின்னங்கள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா மூலம் வழங்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் இலங்கை கடற்படை கப்பல்களின் சிறந்த கப்பல் சிறந்த சிரிய கப்பல், சிறந்த துரித தாக்குதல் படகு தேர்ந்தெடுக்கப் படுகின்றதுடன் அங்கு கப்பல்களிடையில் நடத்தப்படுகின்ற விளையாட்டு போட்டிகள், கடற்படை அறிவு, கயிறு கையாளுதல், கப்பல்களுக்கு இடையே போர் பயிற்சிகள் மற்றும் கடலில் மிக கூடுதலாக பயணித்த கப்பல் எனக் காரனங்கள் அடிப்படையில் சிறந்த கப்பல் பெயரிடப்படும்.

அதன் படி கொடி அதிகாரி கொடி கட்டளை மூலம் 2019 ஆண்டில் சிறந்த கப்பலாக இலங்கை கடற்படை கப்பல் சிந்துரலவும் சிறந்த கிறிய கப்பலாக ஏ 521 கப்பலும் சிறந்த துரித தாக்குதல் படகாக பி 450 படகும் தெரிவு செய்யப்பட்டதுடன் 2020 ஜனவரி 31 ஆம் திகதி, கொழும்பு துறைமுகத்தின் பயணிகள் இறங்குதுறையில் வைத்து கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா மூலம் நட்சத்திரம் கொண்ட சின்னங்கள் குறித்த கப்பல்களின் கட்டளை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டன.

மேலும் இந் நிகழ்வுக்காக கடற்படைத் தலைமை பணியாளர், மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி, இயக்குநர் பொது செயல்பாடுகள், கொடி அதிகாரி கடற்படை கொடி கட்டளை, கப்பல்கள் மற்றும் படகுகளின் கட்டளை அதிகாரிகள், மூத்த மற்றும் இளைய அதிகாரிகள் மற்றும் அனைத்து கப்பல்கள் மற்றும் கப்பல்களின் மாலுமிகள் பங்கேற்றனர். வெற்றிபெற்ற கப்பல்களின் மற்றும் படகுகளின் அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் கடற்படைத் தளபதியுடன் குழு புகைப்படத்திற்கும் கழந்து கொண்டுள்ளனர்.