வட மத்திய கடற்படை கட்டளையின் புதிய தளபதி கடமைகளை பொறுப்பேற்றார்.

ரியர் அட்மிரல் லலித் திசானநாயக்க 2020 ஜனவரி 31 ஆம் திகதி வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதியாக பொறுப்பேற்றார்.

வட மத்திய கடற்படை கட்டளையின் முன்னாள் தளபதி சுதத் குருகுலசூரிய தனது கடமைகளை வட மத்திய கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து புதிய கட்டளை தளபதி ரியர் அட்மிரல் லலித் திசானாயக்கிடம் அதிகாரப்பூர்வமாக வழங்கினார். ரியர் அட்மிரல் லலித் திசானாயக்க வட மத்திய கடற்படைத் தளபதியாக பொறுப்பேற்பதற்கு முன்பு கடற்படை தலைமையகத்தின் இயக்குநர் பொது நிர்வாகமாக பணியாற்றினார்.

புதிய தளபதியை கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்கப்பட்டது. காவல்படையினை ஆய்வு செய்த பின்னர், புத்த மதகுருக்களின் மற்றும் இணைக்கப்பட்ட அதிகாரிகளின் வாழ்த்துக்களுக்கு மத்தியில் அவர் தனது கடமைகளைத் தொடங்கினார். இதனையடுத்து, வடமத்திய கடற்படை கட்டளையின் துணைத் தளபதி ஜெயந்த கமகே, நிறுவனங்களின் தளபதிகள், துறையின் மூத்த மற்றும் இளைய அதிகாரிகள் ஆகியோருடன் கட்டளையின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து உரையாடினார்.