சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாக்க கடற்படை பங்களிப்பு

கடல் மற்றும் நில சுற்றுச்சூழல் அமைப்புகள் பாதுகாப்பில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்ற இலங்கை கடற்படை சதுப்புநில சுற்றுச்சூழல் விரிவாக்கும் திட்டத்தின் கீழ் ஒரு சதுப்புநில நடவு திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.

வடக்கு கடற்படை கட்டளை மையமாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த திட்டத்தின் கீழ், 2020 ஜனவரி 31, ஆம் திகதி கடற்படையால் 2500 சதுப்பு தாவக்கண்றுகளை நடப்பட்டன. அதன் படி, கடற்படை துனை தலைமை பணியாளர் மற்றும் வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி, ரியர் அட்மிரல் கபில சமரவீரவின் அறிவுறுத்தல்களின் படி வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பல் எலார, உத்தர மற்றும் அக்போ ஆகியவையுடன் இனைந்து யாழ்ப்பாணம் பொன்னாலை களப்பு பகுதியில் மேற்கொண்டுள்ள இந்த திட்டத்துக்காக ஏராளமான கடற்படையினர் கலந்து கொண்டனர்.

சதுப்புநில பாதுகாப்பு திட்டத்திற்கு கூடுதலாக, இலங்கை கடற்படை கடற்கரை சுத்தம் செய்தல், கடல் ஆமை பாதுகாப்பு மற்றும் பவள பாதுகாப்பு போன்ற பல திட்டங்களையும் மேற்கொண்டு வருகிறது. இது தற்போதைய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் நேரடி மேற்பார்வையின் கீழ் இலங்கையின் கடல் மற்றும் நிலப்பரப்பு சுற்றுச்சூழல் அமைப்புகளின் பாதுகாப்பிற்கு பங்களிக்கும்.