கடல் நீரில் பையில் சிக்கிய கடல் ஆமையை கடற்படை மீட்டுள்ளது

2020 ஜனவரி 29, ஆம் திகதி கடற்படை ஒரு பையில் சிக்கிய கடல் ஆமையை நீர்கொழும்பு கடல் பகுதியில் வைத்து மீட்டுள்ளது.

2020 ஜனவரி 29 ஆம் திகதி இடம்பெற்ற கொழும்பு கடற்படை பயிற்சி 2020 (CONEX – 20) யில் பங்கேற்ற இலங்கை கடற்படையின் சமுதுர கப்பல் நீர்கொழும்பு கடல் பகுதியில் ஒரு பையில் சிக்கிய கடல் ஆமையொன்று கவனித்தது. அதன்படி, சிக்கிய கடல் ஆமை கப்பலுக்கு எடுத்து பையை அகற்றிய பின்னர் அதை பாதுகாப்பாக கடலுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அழிந்துபோகும் அபாயத்தில் உள்ள இந்த கடல் ஆமைகளைப் பாதுகாக்க கடற்படை நடவடிக்கை எடுத்து வருகிறது.