கடந்த 36 மணி நேரத்தில் வடக்கு கடல் பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கைகள் முலம் அரை டன் கேரள கஞ்சாவை கடற்படை பறிமுதல் செய்துள்ளது

கடந்த 36 மணி நேரத்தில் கடற்படை வட கடலில் மட்டும் மேற்கொண்ட நடவடிக்கைகள் முலம் அரை டன்னுக்கு மேற்பட்ட கேரள கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளது.

ශவட கடலில் சுமார் 590 கிலோகிராம் கேரள கஞ்சாவை இலங்கை கடற்படை வெற்றிகரமாக கைப்பற்றியுள்ளது. அதன்படி, கடந்த 36 மணி நேரத்தில், யாழ்ப்பாணம் மாதகல்துரை பகுதியில் 191 கிலோகிராம் கேரள கஞ்சா, யாழ்ப்பாணம் மைலடி பகுதியில் 99 கிலோகிராம் கேரள கஞ்சா, யாழ்ப்பாணம் புங்குடுதிவு பகுதியில் கிட்டத்தட்ட 300 கிலோகிராம் கேரள கஞ்சாவையும் கடற்படை பறிமுதல் செய்துள்ளது.

மேலும், கடத்தல்காரர்களால் கேரள கஞ்சா நாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தாலும் கடற்படையின் தொடர்ச்சியான சோதனை நடவடிக்கைகளினால் இந்த கடத்தல் நடவடிக்கையை நிறுத்த முடிந்தது, மேலும் இந்த ஆண்டில் நாற்பத்து மூன்று சந்தேக நபர்கள் (43) கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.