சட்டவிரோதமாக மணல் அகழ்வு செய்த நான்கு நபர்கள் கடற்படையினால் கைது

2020 பெப்ரவரி 05 அன்று ஜிங்கங்கையில் அனுமதியின்றி சட்டவிரோத மணல் சுரங்கத்தில் ஈடுபட்ட நான்கு (04) நபர்களை கடற்படையினால் கைது செய்யப்பட்டனர்.

தெற்கு கடற்படை கட்டளை நடத்திய சோதனையின் போது, அனுமதியின்றி ஜிங்கங்கையில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு செய்யும் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். சட்டவிரோதமாக அகழ்ந்த மணல் ஒரு க்யூப் மற்றும் மணல் சுரங்கத்திற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் கடற்படை காவலில் வைக்கப்பட்டன. சந்தேக நபர்கள் வக்வெல்ல, பொடல மற்றும் கணேகம பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், சட்டவிரோதமாக அகழ்வுசெய்த மணல் 01 கன சதுரம் மற்றும் மணல் சுரங்கத்திற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மேலதிக விசாரணைக்காக தெலிக்கட மற்றும் படேகம காவல் நிலையங்களுக்கு ஒப்படைக்கப்பட்டன. சட்டவிரோத மணல் சுரங்கத்தால் சுற்றுச்சூழல் அமைப்புக்கு ஏற்படும் சேதங்களைத் தடுக்கும் பொருட்டு, கடற்படை தொடர்ச்சியான சோதனைகள் மற்றும் தேடல் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த தேசிய திட்டத்தில் பங்களிக்கிறது.