தீவின் கடலோரங்களை பாதுகாக்க கடற்படையின் பங்களிப்பு

கடற்படையின் கடற்கரை துப்புரவு செய்யும் திட்டத்தின் மேலும் இரண்டு நிகழ்வுகள் வடக்கு மற்றும் தெற்கு கடற்படை கட்டளைகளில் 2020 பெப்ரவரி 05 மற்றும் 07 ஆகிய திகதிகளில் நடத்தப்பட்டன.

அதன்படி, “கிரீன் அன்ட் ப்ளூ டிரைவ்” இன் கீழ், யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்கரை பகுதி, டெல்ஃப்ட் தீவைச் சுற்றியுள்ள கடற்கரை, யாழ்ப்பாண தீபகற்பத்தில் உள்ள மண்டதிவு தீவின் கடற்கரை பகுதி மற்றும் காலியில் உள்ள மகாமோதர கடற்கரை பகுதி ஆகியவை கடற்படைப் வீரர்களினால் சுத்தம் செய்யப்பட்டன. பொதுமக்களின் உதவியுடன் கடற்படைப் வீரர்களின் அர்ப்பணிப்பின் விளைவாக, இயற்கை காரணங்கள் மற்றும் மனித நடவடிக்கைகளால் பெரிதும் மாசுபட்ட கடற்கரைகளின் அழகை மீட்டெடுக்க முடிந்தது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் கட்டளைகளைத் தொடர்ந்து, அனைத்து கடற்படை கட்டளைகளிலும் சுற்றியுள்ள கடற்கரை பகுதிகளை சுத்தம் செய்வதற்கும், தீவைச் சுற்றியுள்ள மாசுபட்ட கரையோரப் பகுதியை அழகாக மாற்றுவதற்கும் கடற்படை பாராட்டத்தக்க ஒரு வேலையைச் செய்து வருகின்றது. இது தீவு முழுவதிலுமிருந்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றது.


தென் கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டம்


யாழ்ப்பாணத்தில் கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டம்