மீன்பிடி வலையில் சிக்கிய பதினைந்து கடல் ஆமைகள் கடற்படையினரால் மீட்ப்பு

கடற்படை, தலை மன்னாருக்கு வெளியே கடலில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, (பெப்ரவரி 10) மீன்பிடி வலையில் சிக்கிய 15 கடல் ஆமைகளை மீட்க முடிந்தது.

கடல் ஆமைகளைப் பாதுகாப்பதில் அதிக அக்கறை கொண்ட கடற்படை, தலை மன்னார் கடல் பகுதியில் மேற்கொண்ட ரோந்துப் நடவடிக்கையின் போது, மீனவர்கள் போடப்பட்ட மீன்பிடி வலையில் சிக்கியுள்ள பல கடல் ஆமைகளைக் அவதானித்தார். அதன்படி இவ் அவலத்திற்கு விரைவாக பதிலளித்த கடற்படை, வலையில் சிக்கிய 15 கடல் ஆமைகளையும் கடலுக்கு பாதுகாப்பாக விடுவித்தனர்.

ஏழு வகை கடல் ஆமைகள் அழிந்து போகும் அச்சுருத்தலுக்குள்ளானதென என பட்டியலிடப்பட்டுள்ளன, அவற்றில் ஐந்து வகைகள் இலங்கை கடற்கரையில் காணப்படுகின்றன. இதற்கிடையில், அழிந்து போகும் இந்த உயிரினங்களை பாதுகாக்க, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் தொலைநோக்கு கருத்தாக்கமான ‘கிரீன் அண்ட் ப்ளூ டிரைவ்’ இன் கீழ் கடற்படை வீரர்கள் பல கடல் ஆமை பாதுகாப்பு திட்டங்களில் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.