ஹீரல்லுகம மகா வெவ குளம் கடற்படையால் சுத்தம் செய்யப்பட்டது

கடற்படையால் 2020 பிப்ரவரி 9 அன்று மெதவச்சி, துலான ஹீரல்லுகம மகா வெவ குளத்தில் உள்ள ஜப்பான் ஜப்பர தாவரங்கள் அகற்றி மக்கள் பயன்பாட்டுக்காக குளத்தை சுத்தம் செய்யப்பட்டது.

ஆக்கிரமிப்பு ஜப்பான் ஜபர தாவரங்கள் பரவுவதால் மக்களால் பயன்படுத்த முடியாத நிலமையில் உள்ள மெதவச்சி பிரதேச செயலகத்தைச் சேர்ந்த துலான ஹீரல்லுகம மகா வெவ குளம் கடற்படையினரின் மிகுந்த முயற்சியால் சுத்தம் செய்யப்பட்டது.

மேலும், இந்த செயல்பாடு தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கடற்படைக்கு நன்றி தெரிவித்தனர்.