கடலாமை இறைச்சியுடன் ஒரு நபர் கடற்படையால் கைது

இலுப்புகடவாய் பகுதியில் 2020 பிப்ரவரி 11, ஆம் திகதி மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையில் கடல் ஆமை இறைச்சியுடன் ஒருவரை கடற்படையால் கைது செய்யப்பட்டது.

இலங்கையைச் சுற்றியுள்ள கடலின் கடல் வளங்களை பாதுகாக்க கடற்படை தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் படி 2020 பிப்ரவரி 11 ஆம் திகதி கடற்படையினர் இலுப்புகடவாய் பகுதியில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான ஒரு மீன்பிடிப் படகொன்றை ஆய்வு செய்து சோதிக்கப்பட்டதுடன் அங்கு இருந்து சுமார் 25 கிலோ கிராம் கடலாமை இறைச்சி கண்டுபிடிக்கப்பட்டது. அதன் படி குறித்த படகில் இருந்த நபர், கடலாமை இறைச்சி மற்றும் பிற மீன்பிடி பொருட்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டன.

இவ்வாரு கைது செய்யப்பட்ட நபர் இப் பகுதியில் வசிக்கும் 39 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேக நபர், கடலாமை இறைச்சி மற்றும் பிற மீன்பிடி பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக வேதிதலதிவு மீன்வள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.