கடற்படை சேவா வனிதா பிரிவின் சமுக நலத் திட்டம்

கடற்படை சேவா வனிதா பிரிவு மூலம் மேற்கொள்ளப்படுகின்ற மற்றொரு சமுக நலத் திட்டம் 2020 பிப்ரவரி 11 ஆம் திகதி சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி அருந்ததி உதிதமாலா ஜயனெத்தி தலைமையில் கடற்படை தலைமையகத்தில் செயல்படுத்தப்பட்டது.

கடற்படை சேவா வனிதா பிரிவின் நிதி உதவியுடன் சேவா வனிதா பிரிவின் தலைவியின் வழிகாட்டுதலின் கீழ் பல நன்கொடைகள் வழங்கப்பட்டன. அதன்படி, கடற்படையில் பணியாற்றும் சிவில் ஊழியரான திரு. ஆர்.எம். ஆனந்தவின் தற்காலிகமாக கட்டப்பட்ட வீட்டை புதுப்பிப்பதற்காக சேவா வனிதா நிதியின் ரூ .300,000.00 நன்கொடையாக வழங்கப்பட்டது. மேலும், கடற்படையை விட்டு வெளியேறிய கடற்படை வீரர் டி.ஜி.ஜி சஞ்சீவ எஸ்.டப் 32101 வின் முன்று குழந்தைகளுக்கு பாடசாலை பொருட்களை வழங்கப்பட்டதுடன் இறந்த கடற்படை வீர்ர் என்.ஏ.டி கருனாரத்ன வீ.ஏ 66577 வின் இந்த ஆண்டு தானத்துக்காக பிரிகரை சேவா வனிதா பிரிவின் தலைவியால் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வுக்காக சேவா வனிதா பிரிவின் செயற்குழு உறுப்பினர்கள் திருமதி சாந்தனி சமரவீர, திருமதி குமாரி வீரசிங்க, திருமதி யசிந்தா விஜேசேகர மற்றும் கடற்படை சேவா வனிதா பிரிவின் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.