டிங்கி படகில் ஏற்பட்ட தீ அனர்த்தம் கட்டுப்படுத்த கடற்படை ஆதரவு


நுவரெலியா கிரிகோரி ஏரியின் இறங்குதுறையில் நிறுத்தப்பட்டிருந்த சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் படகில் இன்று (2020 பிப்ரவரி 13) திடீரென ஏற்பட்ட தீயை அணைக்க கடற்படை உதவியது.

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ள நுவரெலியா கிரிகோரி ஏரிக்கு வருகை தரும் மக்களின் உயிரைப் பாதுகாக்க இலங்கை கடற்படை சிறப்பு குழுவை நியமித்துள்ளது. இன்று (2020 பிப்ரவரி 13) நுவரெலியா கிரிகோரி ஏரியில் இறங்குதுறையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் டிங்கி படகில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து கடற்படை துரித தாக்குதல் படகு படையின் குழு கவனித்ததுடன் தீ மற்ற கப்பல்களுக்கு பரவாமல் வெற்றிகரமாக அணைக்கப்பட்டது. ஒரு பெரிய விபத்து கடற்படையினரினால் தவிர்க்கப்பட்டது