மூன்று சட்டவிரோத குடியேறியவர்களுடன் மேலும் 02 நபர்கள் கடற்படையால் கைது

சட்டவிரோதமாக கடல் வழியாக இலங்கைக்கு வந்த மூன்று இந்தியர்களுடன் இரண்டு பேரை (02) 2020 பிப்ரவரி 14, அன்று, கடற்படை கைது செய்தது.

தலைமன்னார் வடக்கு கடல் பகுதியில் ரோந்து சென்ற கடற்படைக் கப்பலொன்று மூலம் சந்தேகத்திற்கிடமான படகொன்று கண்கானிக்கப்பட்டது. அங்கு மேலும் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கடல் வழியாக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வர முயற்சித்த இந்த குழு கடற்படை கைது செய்துள்ளது. அவர்களில் 39 வயதான ஒரு இந்திய ஆண் (01), 33 வயதான ஒரு இந்தியப் பெண் (01), 7 வயதான ஒரு சிறுமி (01), அவர்களை இலங்கைக்கு கொண்டுவருவதற்காக டிங்கி படகு கொண்டு சென்ற இரண்டு இலங்கையர்கள் உள்ளனர்.ය.

கடற்படையால் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் 36 மற்றும் 44 வயதுடைய மன்னார் பேசாலை பகுதியில் வசிப்பவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

அதன்படி, தலைமன்னார் இலங்கை கடற்படை கப்பல் தம்மன்னா நிருவனத்திற்கு கொண்டு வந்த குறித்த குழுவினருக்கு முதலுதவி மற்றும் மருத்துவ வசதிகளை வழங்க கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளுக்காக இவர்களை தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.