சதுப்புநில செடிகள் வெட்டி கொண்டு சென்ற ஒரு நபர் கடற்படையால் கைது

மன்டத்தீவு களப்பு பகுதியில் இன்று (2020 பிப்ரவரி 16) கடற்படை மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சதுப்புநில செடிகள் வெட்டி டிங்கி படகொன்று மூலம் கொண்டு சென்ற ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.

கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நன்கு அக்கறை கொண்ட இலங்கை கடற்படை, மன்டத்தீவு களப்பு பகுதியில் நடத்தப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது இந்த சந்தேக நபரை கைது செய்தது. கைது செய்யப்பட்ட நபர் யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் வசிக்கும் 41 வயதானவர் என கண்டறியப்பட்டது.

கடற்படை காவலில் வைக்கப்பட்ட சந்தேக நபர், சதுப்புநில செடிகள், டிங்கி படகு மற்றும் ஓபிஎம் ஆகியவை குறித்து மேலதிக சட்ட நடவடிக்கை யாழ்ப்பாணம் வன அலுவலர் அலுவலகத்திடம் மேற்கொள்கிறது.

கடலோர அரிப்பைத் தடுக்க மிகவும் உதவியான இந்த சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்பு சிலரால் அழிக்கப்படுகிறது. கடற்படை அத்தகைய குழுக்களின் முயற்சிகளைத் தடுக்கவும், அவர்களுக்கு எதிராக சட்டத்தை அமல்படுத்தவும் செயல்பட்டு வருகிறது. மேலும், தீவின் கடல் பகுதிகளைச் சுற்றியுள்ள சதுப்பு நிலத்தை மீண்டும் நடவு செய்ய இலங்கை கடற்படை பல திட்டங்களை வெற்றிகரமாக தொடங்கியுள்ளது. இந்த திட்டங்களின் பிரதான நோக்கம் இலங்கையைச் சுற்றியுள்ள கடலோரப் பகுதியைப் பாதுகாப்பதாகும்.