வடக்கு கடற்படை கட்டளை ஏற்பாடு செய்த “உத்தர நடைப்பயணம்” வெற்றிகரமாக நிறைவடைந்தது

2020 பிப்ரவரி 16 ஆம் திகதி வடக்கு கடற்படை கட்டளை ஏற்பாடு செய்த உத்தர நடைப்பயணம்’ வெற்றிகரமாக நிறைவடைந்தது.

கடற்படை வீரர்களின் உடல் நலத்தின் முக்கியத்துவத்தை காட்டும் நோக்கில் துனை தலைமை பணியாளர் மற்றும் வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீரவின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை கடற்படைக் கப்பல் உத்தர நிருவனத்தின் கட்டளை அதிகாரி கேப்டன் மகேஷ் டி சில்வாவினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி துனை தலைமை பணியாளர் மற்றும் வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீர உட்பட துறைத் தளபதிகள் மற்றும் 350 கடற்படையினர் இலங்கை கடற்படைக் கப்பல் உத்தர நிருவனத்திலிருந்து பொன்னாலை சந்தி வரை 17 கிலோமீட்டர் நடைப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.

இது தவிர, சமூக மற்றும் கடல் சுற்றுச்சூழல் மேம்பாட்டு திட்டமாக பொன்னலை களப்பு பகுதியில் 600 சதுப்பு நிலங்கள் நடப்பட்டன. இலங்கை கடற்படை வடக்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் சதுப்பு நிலங்களை நடவு செய்து வருகிறது, மேலும் அப்பகுதியின் பொதுமக்களும் இந்த நடவடிக்கைகளுக்கு தனது ஒத்துழைப்பை வழங்குகிறார்கள்