டிக்கோவிட்டவில் ஏற்பட்ட தீயை விபத்தை அணைக்க கடற்படை உதவி

2020 பெப்ரவரி 18 ஆம் திகதி, டிக்கோவிட்ட மீன்வளத் துறைமுகத்தின் தெற்கு முனையத்திற்கு முன்னால் உள்ள ஒரு தரிசு நிலத்தில் அவசரகால தீ விபத்து ஏற்பட கடற்படை தீயணைப்பு வீரர்கள் குழு தீயை அணைக்க உதவியது.

டிகோவிட்ட மீன்வளத் துறைமுகத்தின் தெற்கு முனையத்திற்கு முன்னால் ஒரு தரிசு நிலத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கான தகவலுக்கு விரைவான எதிர்வினையாக, மேற்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட ஒரு தீயணைப்பு குழு உடனடியாக அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டது. அதன்படி, அப்பகுதியில் வசிப்பவர்களின் உதவியுடன், தீயணைப்பு இயந்திரத்தை உள்ளடக்கிய கடற்படை தீயணைப்பு குழு, பரவியிருந்த தீயை அணைத்தனர்.

தீவு முழுவதும் எழும் எந்தவொரு பேரழிவு சூழ்நிலையிலும், மக்களுக்கு மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை வழங்க இலங்கை கடற்படை எப்பொளுதும் தயாராக உள்ளது.