03 கிலோ 500 கிராம் கேரள கஞ்சாவை கைது செய்ய கடற்படை உதவி

2020 பிப்ரவரி 19 ஆம் திகதி யாழ்ப்பாணம் மரதன்கேனி பகுதியில் நடந்திய ஒரு நடவடிக்கையின் போது கடற்படை மற்றும் கலால் பிரிவு இணைந்து 03 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தன.

வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் சன்கேனி கலால் பிரிவு இனைந்து யாழ்ப்பாணம் மரதன்கேனி பகுதியில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது பாதையில் அருகில் இருந்த இரண்டு சந்தேகத்திற்கிடமான பொதிகளை கண்டுபிடித்தனர். குறித்த பொதிகள் மேலும் பரிசோதித்ததில், 03 கிலோ 500 கிராம் கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கடற்படை அடிக்கடி மேற்கொள்கின்ற தேடல் நடவடிக்கைகளால் சந்தேக நபர்கள் கேரள கஞ்சாவை கைவிட்டதாக நம்பப்படுகிறது. கைது செய்ய்படப்பட்ட 03 கிலோ 500 கிராம் கேரள கஞ்சா மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சன்கேனி கலால் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது.