நீருக்கடியில் காணொளிகளை பதிவு செய்யக்கூடிய ட்ரோன்கருவி கடற்படையிடம் கையளிப்பு

நீருக்கடியில் காணொளிகளை பதிவு செய்யக்கூடிய புத்தம்புதிய ட்ரோன்கருவி நேற்று (2020 பிப்ரவரி 20) கடற்படையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ட்ரோன் கருவியை உருவாக்கிய ‘டெஸ்’ தனியார் நிறுவனம் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வாவிடம் கையளித்துள்ளது.

இந்த தனியார் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சிரான் பெர்னாண்டோ இக் கருவியை கடற்படை தளபதியிடம் கடற்படைத் தலைமையகத்தில் கையளித்துள்ளார். 100 மீற்றர் ஆழத்தில் நீருக்கடியில் மிகத் தௌவான புகைப்படங்களையும் எடுக்கக் கூடியது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் நீல-பச்சை கருத்தின் கீழ் செயற்படுத்தப்பட்டு வரும் பவளப்பாறை திட்டத்தை மேலும் விருத்தி செய்ய இந்த நீருக்கடியிலான ட்ரோன் கருவி பயன்படுத்தப்படும். நிருக்கடியிலான சுழியோடிகளுக்கு இக்கருவி முக்கியமானதாக கருதப்படுகிறது. அத்துடன் கடற்படை மேற்கொள்ளும் சமுத்தரிம் சார் சுழல் பாதுகாப்பு திட்டத்துக்கு முக்கிய உதவி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.