ஜப்பானிய கடற்படையின் தகனாமி (TAKANAMI) கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

ஜப்பானிய கடற்படையின் தகனாமி (TAKANAMI) இன்று (2020 பெப்ரவரி 21) கொழும்பு துறைமுகத்திற்கு வந்தது. இந்த கப்பல் இலங்கை கடற்படையினால் கடற்படை மரபுகளுக்கேற்ப வரவேற்க்கப்பட்டது.

அதன்படி, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிக்கும் நோக்கில் இலங்கைக்கு வந்த இந்தக் கப்பலின் கட்டளை அதிகாரி கொமான்டர் யூசி நிஹாரா (Ryouichi Nihara) உட்பட அதிகாரிகள் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சுமித் விரசிங்கவை சந்தித்து இருதரப்பு விஷயங்கள் குறித்து கலந்துரையாடினார்கள். இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் நினைவு பரிசு பரிமாற்றமும் நடைபெற்றது. மேலும் இந்த மாதம் 23 ஆம் தேதி வரை கப்பல் இலங்கையில் இருக்கும்.