சீதுவ, அம்பலன்முல்ல பகுதியில் ஏற்பட்ட தீ அனர்த்தம் கட்டுப்படுத்த கடற்படை உதவி

சீதுவ, அம்பலன்முல்ல பகுதியில் உள்ள சீதுவ நகர சபையின் குப்பை முற்றத்தில் ஏற்பட்ட தீ விபத்தினை கட்டுப்டுத்த இன்று (2020 பிப்ரவரி 20) கடற்படையினர் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.

அதன் படி, சீதுவ, அம்பலன்முல்ல பகுதியில் உள்ள சீதுவ நகர சபையின் குப்பை முற்றத்தில் ஏற்பட்ட தீ விபத்தினை பற்றி இலங்கை கடற்படைக்கு தகவல் அறிவிக்கப்பட்ட பின் மேற்கு கடற்படை கட்டளையின் வீர்ர்களினால் இத்தீயணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இத்தீயணைப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கை கடற்படை தீயணைப்பு பிரிவின் கடற்படை விரர்கள், தீ அனைப்பு வாகனங்கள் மற்றும் தண்ணீர் பவுசர்கள் கழந்துகொண்டதாக குறிப்பிடத்தக்கது. மேலும், கொழும்பு தீயணைப்பு படை, இலங்கை இராணுவம் மற்றும் விமானப்படை ஆகியவை கடற்படையின் தீயணைப்பு படையுடன் இணைந்து தீயை கட்டுப்டுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.

நாட்டில் எந்தவொரு அவசர நிலையிலும் முன்னணியில் இருக்கும் இலங்கை கடற்படை, ஏதேனும் பேரழிவு ஏற்பட்டால் பொதுமக்களுக்கு உதவ தயாராக உள்ளது.