இலங்கை சீனா தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் மூத்த கேர்ணல் வன் டோன்ங் கிழக்கு கடற்படை கட்டளைக்கு வருகை

இலங்கை சீனா தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் மூத்த கேர்ணல் வன் டோன்ங் இன்று (2020 பிப்ரவரி 21) கிழக்கு கடற்படை கட்டளைக்கு வருகை தந்தார்.

அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்ரமசிங்கவிடமிருந்து அன்பான வரவேற்பைப் பெற்ற பின்னர், மூத்த கேர்ணல் வன் டோன்ங் முக்கிய விஷயங்களைப் பற்றி இருதரப்பிலும் பரிமாறிக்கொண்டார். இந்த சந்தர்ப்பங்களைக் குறிக்கும் வகையில் நினைவுச் சின்னங்கள் இடமாற்றமும் நடைபெற்றது, இது அவர் முதல்முறையாக பாதுகாப்பு ஆலோசகராக கடமைகளை ஏற்றுக்கொண்ட பின்னர் கிழக்கு கடற்படை கட்டளைக்கு வந்த முதல் பயணம் இதுவாகும்.