2,450 கடல் அட்டைகளுடன் ஏலு நபர்கள் (07) கடற்படையால் கைது

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி கடல் பகுதியில் சட்டவிரோதமாக கடல் அட்டைகள் பிடித்த 07 பேரை கடற்படை இன்று (2020 பிப்ரவரி 21) கைது செய்தது.

அதன்படி, வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் பொது யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி கடல் பகுதியில் சுழியோடி நடவடிக்கையில் ஈடுபட்டு சட்டவிரோதமாக கடல் அட்டைகள் பிடித்த ஏழு (02) நபர்கள் கைது செய்யப்பட்டனர். அங்கு அவர்களால் பிடிக்கப்பட்ட 2,450 கடல் அட்டைகள், இரண்டு டிங்கி படகுகள் மற்றும் பல சிழியோடி உபகரணங்களை கடற்படையால் கைது செய்யப்பட்டன.

இவ்வாரு கைது செய்யப்பட்ட நபர்கள் குருநகர் பகுதியில் வசிக்கின்ற, 33 முதல் 46 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள், கடல் அட்டைகள், டிங்கி படகு மற்றும் சிழியோடி உபகரணங்கள் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் மீன்வளத்துறை இயக்குநரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.