இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படை ஆகியவை இந்திய கடற்படையுடன் கூட்டுப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன

இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படை ஆகியவை இந்திய கடற்படை விமானம் மூலம் அவசரகாலத்தில் ஆபத்தில் உள்ளவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களைக் கண்டுபிடித்து மீட்பது குறித்து கூட்டுப் பயிற்சியொன்று மேற்கொண்டன.

அதன்படி, இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை மற்றும் இந்திய கடற்படை ஆகியவை இனைந்து 2020 பிப்ரவரி 17 முதல் 20 வரை நான்கு (04) நாட்கள் வீரவில விமானப்படை முகாம்களில் பயிற்சி மேற்கொண்டன. இந்த பயிற்சியின் முக்கிய நோக்கம் ஆபத்தில் உள்ள மக்களையும் உயிர் பிழைத்தவர்களையும் கண்டுபிடித்து மீட்பதாகும். இலங்கை கடற்படை அதிகாரிகள் 6 பேர், 05 இலங்கை விமானப்படை அதிகாரிகள் மற்றும் 5 இந்திய கடற்படை அதிகாரிகள் இந்த பயிற்சியில் பங்கேற்றனர். இந்திய கடற்படையின் கடல் கண்காணிப்பு விமானமொன்று (Dornier Aircraft) இந்த பயிற்சிக்கு பயன்படுத்தப்பட்டது.

மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தப் பயிற்சி உதவியது.