சாம்பியா இராணுவத் தளபதி கடற்படை தலைமையகத்திற்கு வருகை

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டுள்ள சாம்பியா இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் டபிள்யூ.எம். சிக்காஸ்வே உட்பட அதிகாரிகள் இன்று (2020 பிப்ரவரி 24) கடற்படை தலைமையகத்திற்கு வருகை தந்தனர்.

கடற்படை மரபுகளுக்கு இணங்க லெப்டினன்ட் ஜெனரல் டபிள்யூ.எம். சிகாஸ்வே, கடற்படை தலைமையகத்திற்கு அன்புடன் வரவேற்கப்பட்டார். இங்கு இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா மற்றும் சாம்பியா இராணுவத் தளபதி உட்பட அதிகாரிகள் இடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் நினைவு பரிசு பரிமாற்றமும் நடைபெற்றது.